ஷெபாஸ் ஷெரிப்பை புறக்கணித்த பிரதமர் மோடி | PM Modi | SCO summit | Shehbaz Sharif | Pakistan PM
இந்தியா, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான், பெலாரஸ் நாடுகள் உறுப்பினராக உள்ள ஷாங்காய் அமைப்பின் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நடக்கிறது. நேற்று தொடங்கிய இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார். அவரை சீன அதிபர் ஜின்பிங் வரவேற்றார். மாநாட்டின் இடையே பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். குறிப்பாக முதல் நாள் மாநாட்டின் இடையே பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேசினர். இந்நிலையில் இன்று ஷாங்காய் மாநாட்டின் 2வது நாள் நிகழ்வுகள் நடந்தன. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் சீனாவில் ரஷ்ய அதிபர் புடினும், பிரதமர் மோடியும் சந்தித்து பேசினர். அப்போது அவர்களுடன் சீன அதிபர் ஜின்பிங்கும் உரையாடினர். 3 பேரும் பரஸ்பரம் நலம் விசாரித்து கைகுலுக்கி சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தனர். இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்பும் பங்கேற்றுள்ளார். 2வது நாள் மாநாட்டுக்கு முன்னதாக குரூப் போட்டோ எடுக்க தலைவர்கள் மேடையில் திரண்டிருந்தனர். அப்போது பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புடினும் பேசிக்கொண்டே மேடையின் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கம் சென்றனர். வழியில் போட்டோவுக்கு போஸ் கொடுக்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் தயாராக நின்றிருந்தார்.