உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதிகாரத்துக்காக அலையும் குடும்ப கட்சிகள்: மோடி விளாசல் PM Modi | Varanasi |Opposition Parties |

அதிகாரத்துக்காக அலையும் குடும்ப கட்சிகள்: மோடி விளாசல் PM Modi | Varanasi |Opposition Parties |

பிரதமர் மோடி உத்தரப்பிரதேசத்தில் உள்ள அவரது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று சென்றார். சுமார் 3 ஆயிரத்து 880 கோடி மதிப்பிலான 44 திட்டங்களை தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது நான் காசியைச் சேர்ந்தவன். காசி எனக்கு சொந்தம். கடந்த 10 ஆண்டில் வாரணாசி வளர்ச்சி புதிய வேகத்தை எட்டி இருக்கிறது. வாரணாசி மக்கள் விழாக்களை மட்டும் கொண்டாடுவதில்லை. இங்கு நடந்து வரும் வளர்ச்சிகளையும் கொண்டாடுகின்றனர். காசி உள்பட உத்தரப் பிரதேச மாநில மக்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை பெற்று பயன் அடைகின்றனர். இதனால் பல குடும்பங்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் மிச்சப்பட்டுள்ளது. எங்களுடைய அரசு ஏழை மக்களின் மருத்துவ செலவுகளுக்கு பொறுப்பேற்றுள்ளது. இனி யாரிடமும் பண உதவி கேட்கத் தேவையில்லை. கவலைப்படாமல் சிகிச்சை செய்துகொள்ளுங்கள். அரசு பணம் செலுத்தும்.

ஏப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி