உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உடனே அவரை கவனியுங்கள் கூட்டத்தில் உத்தரவிட்ட மோடி pm modi| bjp victory festival| delhi election

உடனே அவரை கவனியுங்கள் கூட்டத்தில் உத்தரவிட்ட மோடி pm modi| bjp victory festival| delhi election

டெல்லி சட்டசபை தேர்தலில் 27 ஆண்டுகளுக்கு பின் பாஜ மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதன் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி டெல்லியில் பாஜ தலைமை அலுவலகத்தில் நடந்தது. தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றி கொண்டிருந்தார். அவரது பேச்சு இடையிடையே தொண்டர்கள் ஆரவாரம் செய்து உற்சாகத்தை காட்டியபடி இருந்தனர். தலைநகர் பிராந்தியத்தில் உள்ள டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம், மற்றும் ராஜஸ்தானில் ஒரே நேரத்தில் ஆட்சியில் இருப்பதாக மோடி பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, தொண்டர்கள் கூட்டத்தில் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் சோர்ந்துபோய் இருப்பதை கவனித்ததும் பேச்சை நிறுத்தினார். அந்த தொண்டரை சுட்டிக்காட்டிய மோடி, அவர் தூங்கி கொண்டு இருக்கிறாரா அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறாரா? டாக்டர் உடனே அவரை பாருங்கள். அவருக்கு யாராவது கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்; உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவரை பார்த்துக்கொள்ளுங்கள் என அக்கறையுடன் கூறினார்.

பிப் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை