உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புருனே நாட்டில் இந்திய பிரதமரின் முதல் அரசு பயணம் Modi at Brunei | Modi Singapore visit| PM Modi| As

புருனே நாட்டில் இந்திய பிரதமரின் முதல் அரசு பயணம் Modi at Brunei | Modi Singapore visit| PM Modi| As

மோடியின் அடுத்த அத்தியாயம் 40 ஆண்டுகளில் முதல் முறை! 3வது முறை பிரதமராக பதவியேற்றதும் ரஷ்யா சென்ற மோடி, ஆகஸ்ட் இறுதியில் உக்ரைன், போலந்து நாடுகளுக்கும் சென்று வந்தார். அதன் தொடர்ச்சியாக இப்போது புருனே, சிங்கப்பூர் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமரின் இந்த பயணம், ஆக்ட் ஈஸ்ட் பாலிசியின் படி, தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான உறவை மேம்படுத்தும் நடவடிக்கையாக அமையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 3, 4ம் தேதிகளில் புருனேவில் இருக்கும் மோடி, அந்நாட்டு பிரதமர் சுல்தான் ஹாஜி ஹசனலை சந்தித்து பேசுகிறார். புருனே - இந்தியா இடையே 40 ஆண்டுகளாக துாதரக உறவு நீடிக்கும் நிலையில், அந்நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார். இரு நாட்டு உறவு, தொழில் வர்த்தகம் குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் மோடி பேச்சு நடத்த உள்ளார்.

செப் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை