கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும் மோடி PM Modi |diwali |Goa |INS Navy Ship|
2014-ல் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றார். அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் சேர்ந்து கொண்டாடி வருகிறார். வரும் அக்டோபர் 20ம் தேதி, கோவாவில் உள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பலில் கடற்படை வீரர்களுடன் அவர் இந்த ஆண்டு தீபாவளியை கொண்டாட முடிவு செய்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு, ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது. அந்த வெற்றியை கடற்படை வீரர்களுடன் பிரதமர் கொண்டாட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2014ல் அவர் முதன் முதலில் லடாக்கில் உள்ள சியாச்சின் பனிப் பகுதிக்கு சென்று, அங்கு பணியில் இருந்த ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். 2015ம் ஆண்டில் பஞ்சாபின் அமிர்தசரஸ் சென்று அங்குள்ள ராணுவ வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளியை கொண்டாடினார். 2016-ல் இமாச்சல பிரதேசத்தில் இந்திய-சீன எல்லைப் பகுதியை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார். 2018ல் உத்தராகண்ட் மாநிலம் ஹர்சில் எல்லையிலும், 2019ல் ஜம்மு காஷ்மீரின் ரஜோரியிலும் வீரர்களுடன் கொண்டாடினார். 2020ல் கொரானா தொற்றுப் பரவலுக்கு இடையிலும் ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரில் உள்ள லோங்கேவாலாவில் வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார். 2021ல் மீண்டும் ஜம்மு-காஷ்மீரிலும் 2022ல் கார்கில் எல்லையிலும் 2023ல் இமாச்சல பிரதேசத்திலும், 2024ல் குஜராத்திலும் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார். #PMModi #Diwali #Goa #INSNavyShip #IndianNavy #FestivalOfLights #GoaDiwali #ModiInGoa #NavalExcellence #CelebratingTogether #MilitaryPride #DiwaliCelebrations #GoaEvents #NavyShowcase #PMModiInGoa #LightsAndTraditions #DefenceEvent #FestivalSpirit #ProudIndian