முதலில் ஜனநாயகம், முதலில் மனிதநேயம்: மோடி சொன்ன மந்திரம் pm modi| guyana parliament modi speech
கயானா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பார்லிமென்டில் உரையாற்றினார். முதலில் ஜனநாயகம், முதலில் மனிதநேயம் என்ற எண்ணம் தான் உலகத்தை முன்னேற்றுவதற்கான சிறந்த வழி. முதலில் ஜனநாயகம் என்பது அனைவரின் வளர்ச்சியுடன் முன்னேற கற்றுத்தருகிறது. மனிதநேயம் முதலில் என்ற எண்ணம் நமது முடிவுகளின் திசையை தீர்மானிக்கிறது. அதனடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் மனித குலத்தின் நலனுக்காக இருக்கும். ஜனநாயகம் என்பது ஒரு அமைப்பு மட்டுமல்ல அதுதான் நமது டிஎன்ஏ, நோக்கம், நடத்தை என்பதை இரு நாடுகளும் ஒன்றாக காட்டி உள்ளன. நாங்கள் ஒருபோதும் விரிவாக்க உணர்வோடு முன்னேறவில்லை. வளங்களை கைப்பற்றுவது, பிடுங்குவது போன்ற மனப்பான்மையிலிருந்து எப்போதும் விலகியே இருக்கிறோம்.உலகளவிய தெற்கு பகுதியின் குரலாக இந்திய மாறி இருக்கிறது. உலகின் தெற்கு பகுதி கடந்த காலங்களில் மிகவும் பாதிக்கப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வளர்ச்சியை அடையவே நாம் முயற்சிக்கிறோம். இருந்தாலும், பல நாடுகள் சுற்றுச்சூழலை அழித்து முன்னேறி உள்ளன. இன்று உலகின் தெற்கு பகுதி காலநிலை மாற்றத்தால் மிகப்பெரிய விலையை கொடுத்து கொண்டு இருக்கிறது. இந்தியாவாக இருந்தாலும், கயானாவாக இருந்தாலும், வளர்ச்சி சார்ந்த விஷயங்களில் விருப்பங்கள் உள்ளன. அதற்கு உலகளாவிய தெற்குபகுதி ஒன்றுபட்டு நிற்பது முக்கியம். இது மோதல்ளுக்கான நேரம் அல்ல, மோதல் சூழ்நிலைகளை கண்டறிந்து அகற்றுவதற்கான நேரம். பயங்கரவாதம், போதை, சைபர் கிரைம் என எத்தனையோ சவால்கள் உள்ளன. அவற்றை எதிர்த்து போராடுவதன் மூலம் மட்டுமே நமது சந்ததியினரின் வருங்காலத்தை வடிவமைக்க முடியும் என்று பிரதமர் மோடி கூறினார்.