உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பைடனை தொடர்ந்து, புடினுடன் மோடி பேசியது என்ன? PM Modi Russia vs Ukraine war Peaceful Resolution Vl

பைடனை தொடர்ந்து, புடினுடன் மோடி பேசியது என்ன? PM Modi Russia vs Ukraine war Peaceful Resolution Vl

ஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2022 பிப்ரவரி முதல் போர் நடந்து வருகிறது. இரு தரப்பிலும் பல ஆயிரம் பேர் பலியாகி விட்டனர். ஆனாலும் போர் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டேதான் போகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் போரில் உதவிபுரிகின்றன. ரஷ்யாவுக்கு சீனா போன்ற நாடுகள் ஆதரவாக உள்ளன. இந்தியாவும் கூட, ரஷ்யாவின் தோழமைநாடுதான். ஆனாலும் போர் துவங்கிய நாள் முதலே இந்தியாவின் நிலைப்பாடு அமைதி என்பதாகத்தான் உள்ளது. போரை நிறுத்த பேச்சு வார்த்தை நுடத்துங்கள் என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடமும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடமும் மோடி பலமுறை வலியுறுத்திவிட்டார். பிரதமர் மோடி 3வது முறை பிரதமர் ஆன பிறகு, ரஷ்யா, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்ற தீர்க்கமான முடிவுடன் செயல்பட்டு வருகிறார். பதவி ஏற்ற ஒரு மாதத்தில் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் போனது ரஷ்யாவுக்குத்தான்.

ஆக 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !