இந்தியாவுடன் வரி பிரச்னை: டிரம்ப் கொடுக்கும் நம்பிக்கை PM modi smart man good friend best pm US P
அதிக வரி விதிக்கும் நாடு இந்தியாதான் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். அமெரிக்க பொருட்களுக்கு ஒரு நாடு என்ன வரியை விதிக்கிறதோ, அதே வரியை அந்நாட்டின் பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கும் எனவும் டிரம்ப் கூறினார். வரி விதிப்பில் இந்தியாவுக்கு விலக்கு அளிக்க முடியாது என பிரதமர் மோடியை சந்தித்தபோதே தெளிவாக சொல்லி விட்டேன் எனவும் டிரம்ப் கூறியிருந்தார். டிரம்ப்பின் விடாப்பிடியால் அமெரிக்காவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் இந்திய தொழில்துறையினருக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. வரிப் பிரச்னையில் சுமுக தீர்வை எட்டுவதற்காக, இரு நாட்டு வர்த்தகத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இத்தனை நாட்களாக விடாப்பிடியாக பேசி வந்த அதிபர் டிரம்ப் திடீரென சற்றே இறங்கி வந்துள்ளார். இந்தியா அமெரிக்கா இடையிலான வரி விதிப்பு பிரச்னை பேச்சு வார்த்தை எப்படி போய்க் கொண்டிருக்கிறது என கேட்டதற்கு டிரம்ப் கூறியதாவது: