சொன்னபடியே மக்களுக்கு டபுள் தமாக்கா: பிரதமர் மோடி pm modi| gst reforms| gst 2.O| modi address to t
ெல்லியில் பிரதமர் மோடி, தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள் இந்தியாவை தன்னிறைவு பெற செய்வதற்கான நடவடிக்கை என்று குறிப்பிட்டார்.
உரிய காலத்தில் மாற்றங்கள் செய்யாமல், இப்போதைய சூழலில் நாட்டை சரியான இடத்தில் நிலைநிறுத்த முடியாது என கூறிய அவர், தமது சுதந்திர தின உரையை நினைவு கூர்ந்தார்.
சுதந்திர தினத்தில் செங்கோட்டையில் பேசும்போது, இந்தியாவை தன்னிறைவு பெறுவதற்காக அடுத்த தலைமுறையினருக்கான சீர்திருத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டதாக கூறியிருந்தேன்.
இந்த தீபாவளி மற்றும் சாத் பண்டிகைக்கு மக்களுக்கு டபுள் தமாக்கா கிடைக்கும் என்று உறுதி அளித்து இருந்தேன். இப்போது ஜிஎஸ்டி இன்னும் எளிதாக மாற்றப்பட்டு உள்ளது.
நவராத்திரியின் முதல் நாளான செப்டம்பர் 22ல் அடுத்த தலைமுறையினருக்கான இந்த சீர்திருத்தம் அமல்படுத்தப்படும். அனைத்து பொருட்களின் விலையும் குறையும் என்பதால், சாமானிய மக்களுக்கு உதவும் எனக்கூறினார்.
8 ஆண்டுகளுக்கு முன்பு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது, பல சதாப்த கால கனவு நனவாகியது. இது, சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தங்களில் ஒன்று.
21ம் நூற்றாண்டில் இந்தியா முன்னேறி செல்லும்போது, ஜிஎஸ்டி 2.O நாட்டின் வளர்ச்சிக்கு இரட்டை ஊக்கம் அளிக்கும் என மோடி கூறினார்.
புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மிகப்பெரிய நன்மைகளை தரும். ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், மாணவர்கள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் அனைவரும் நன்மை பெறுவார்கள்.
ஜிஎஸ்டிக்குமுன் காங்கிரஸ் ஆட்சியில் ஏராளமான வரிகள் இருந்தன. மருந்து, காப்பீடு, குழந்தைகள் சாப்பிடும் மிட்டாய்கள், வீட்டு உபயோக பொருட்கள், சமையல் அறை பொருட்களுக்கும் அதிக வரி இருந்தது.
நடுத்தர மக்களின் வாழ்க்கையை காங்கிரஸ் அரசு கடினமாக மாற்றியிருந்தது. விவசாயிகளும் அதிருப்தியில் இருந்தனர் என்று பிரதமர் மோடி கூறினார்.
#PMModi #GSTReforms #DoubleDhamaka #Happiness #Diwali2023 #FestiveSeason #IndianEconomy #EconomicGrowth #TaxReform #FinancialEmpowerment