/ தினமலர் டிவி
/ பொது
/ உக்ரைனில் மோடிக்கு இவ்ளோ பாதுகாப்பா? புதிய தகவல் | PM Modi Ukraine visit| SPG Russia vs Ukraine
உக்ரைனில் மோடிக்கு இவ்ளோ பாதுகாப்பா? புதிய தகவல் | PM Modi Ukraine visit| SPG Russia vs Ukraine
பிரதமர் மோடி 3 நாள் பயணமாக போலந்து, உக்ரைன் நாடுகளுக்கு சென்றார். பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு நாடு திரும்பினார். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்யா, உக்ரைன் போர் நடந்து கொண்டிருக்கும் சூழலில் பிரதமர் மோடி உக்ரைன் சென்றது உலகையே உற்று நோக்க வைத்தது. பல பாதுகாப்பு சவால்களை தாண்டி அவர் உக்ரைன் தலைநர் கீவ் சென்றார். இதற்காக போலந்து எல்லையில் இருந்து சிறப்பு ரயிலில் சென்றார். போக 10 மணி நேரம்; திரும்பி வர 10 மணி நேர பயணம். பல சொகுசு வசதிகள் நிறைந்த அந்த ரயிலை குண்டு துளைக்க முடியாது என்பது கூடுதல் சிறப்பு அம்சம்.
ஆக 25, 2024