உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மோடியின் ராஜதந்திர முயற்சிக்கு ஆண்டு இறுதியில் பலன் கிடைக்க வாய்ப்பு! PM Modi|Russia Ukraine| War

மோடியின் ராஜதந்திர முயற்சிக்கு ஆண்டு இறுதியில் பலன் கிடைக்க வாய்ப்பு! PM Modi|Russia Ukraine| War

பிரதமர் மோடி, சமீபத்தில் ரஷ்யா சென்று வந்தார். அதைத் தொடர்ந்து, உக்ரைன் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்தார். இந்த இரு நாடுகளுக்கும், இரண்டு ஆண்டுக்கும் மேலாக போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், மோடி அங்கு சென்றது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உக்ரைன் அதிபரிடம் மோடி என்ன பேசினார் என தெரிந்து கொள்ள, அனைத்து நாடுகளின் துாதர்களும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் நைசாக விசாரித்து வருகின்றனர். போதாக்குறைக்கு, உக்ரைன் சென்று வந்த பின், ரஷ்ய அதிபர் புடின் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோருடன் தொலைபேசியில் பேசி உள்ளார் மோடி.

செப் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை