உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகம் புதுவையில் ₹ 7100 கோடி திட்டங்கள் தொடங்கி வைக்கிறார்

தமிழகம் புதுவையில் ₹ 7100 கோடி திட்டங்கள் தொடங்கி வைக்கிறார்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்துள்ளார். சென்னை ஏர்போர்ட்டில் இறங்கிய அவருக்கு கவர்னர் ரவி, மத்திய இணையமைச்சர் முருகன், தமிழக பாஜ தலைவர் நாகேந்திரன், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னையில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடி, இரவு அங்கு தங்குகிறார். நாளை காலை சென்னை கடற்கரை-எழும்பூர் இடையேயான 4வது ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பின் புதுச்சேரிக்கு செல்லும் அவர் அங்கு நடைபெறும் அரசு விழாவில் மின்சார பஸ்கள், பல்கலைக்கழக புதிய கட்டடம், உட்பட 2700 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மதியம் 3 மணிக்கு மதுரையில் நடைபெறும் விழாவில் 4400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை மோடி தொடங்கி வைக்கிறார்.

பிப் 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை