உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / துள்ளி குதித்த சிறுவனிடம் பாசத்துடன் பேசிய பிரதமர் மோடி PM narendra Modi|HIVANYA TIWARI|Painting

துள்ளி குதித்த சிறுவனிடம் பாசத்துடன் பேசிய பிரதமர் மோடி PM narendra Modi|HIVANYA TIWARI|Painting

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 48,000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் மோடி துவங்கிவைத்தார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கான்பூரைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் சுபம் திவிவேதி கொல்லப்பட்டதை உருக்கத்துடன் குறிப்பிட்டார். ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை அழித்தது பற்றியும் விரிவாக பேசினார். மோடி உணர்ச்சிப்பெருக்குடன் பேசிக்கொண்டிருந்தபோது, 7 ம்வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி Shivanya Tiwari ஷிவன்யா திவாரி தான் வரைந்த ஓவியத்தை உயர்த்தி பிடித்து காட்டினார். சிந்தூர் ஆபரேஷனை விளக்கி அந்த சிறுமி தத்ரூபமாக ஓவியம் தீட்டியிருந்தார். அதைக் கவனித்து விட்ட பிரதமர் மோடி, அந்த சிறுமியிடம் இருந்து ஓவியத்தை வாங்கி வரும்படி சிறப்பு பாதுகாப்புக்குழு அதிகாரிகளிடம் கூறினார். ஓவியத்தை பெற்றுக் கொண்ட மோடி, பேரையும், அட்ரசையும் எழுதிக் கொடும்மா; அப்புறம் உனக்கு பாராட்டுக்கடிதம் அனுப்புறேன் என மாணவியை பார்த்து கூறினார்.

மே 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !