உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 20 வருடங்களுக்கு பின் இந்தியப் பிரதமரின் முதல் விசிட் | PMModi | PM visit 3 countries | Canada

20 வருடங்களுக்கு பின் இந்தியப் பிரதமரின் முதல் விசிட் | PMModi | PM visit 3 countries | Canada

பிரதமர் மோடி ஜூன் 15 முதல் 19 வரை சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியா நாடுகளுக்கு பயணம் செய்ய உள்ளார் என மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்து உள்ளது. முதல் கட்டமாக நாளை பிரதமர் மோடி மத்திய கிழக்கு நாடான சைப்ரஸுக்கு செல்கிறார். இது 20 வருடங்களுக்கு பின் ஒரு இந்தியப் பிரதமரின் முதல் சைப்ரஸ் பயணமாகும். அந்நாட்டு தலைநகர் நிகோசியாவில் ஜனாதிபதி கிறிஸ்டோடியுலசை சந்திக்கிறார். தொடர்ந்து அந்நாட்டு தொழிலதிபர்களையும் சந்தித்து உரையாற்றுகிறார். 16ம் தேதி அங்கிருந்து கிளம்பி பிரதமர் மோடி கனடா செல்கிறார். கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பின் பேரில் கனனாஸ்கிஸ் நகரில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில் மோடி தொடர்ந்து ஆறாவது முறையாக பங்கேற்கிறார். கனடா பயணத்தை முடித்துக்கொண்டு 18ம் தேதி பிரதமர் ஐரோப்பிய நாடான குரோஷியாவுக்குச் செல்கிறார். இது குரோஷியாவிற்கான அவரது முதல் பயணமாகும். அங்கு பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிச்சுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவும், ஜனாதிபதி ஜோரன் மிலானோவிச்சை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 19ல் பிரதமரின் 4 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் முடிகிறது.

ஜூன் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி