உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தனி அலுவலகம் தொடங்கினார் அன்புமணி! | PMK | Anbumani | Ramadoss | PMK Split

தனி அலுவலகம் தொடங்கினார் அன்புமணி! | PMK | Anbumani | Ramadoss | PMK Split

புதுச்சேரியில் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்ட முடிவில் ராமதாஸ் மகள் வழி பேரன் முகுந்தன் பரசுராமனை கட்சியின் இளைஞரணி தலைவராக அறிவித்தார். கட்சியில் சேர்ந்த 4 மாதங்களில் இளைஞரணி தலைவர் பொறுப்பா? அவருக்கு என்ன அனுபவம் இருக்கும் என அன்புமணி கேள்வி எழுப்பினார். நான் சொல்வதை தான் யாராக இருந்தாலும் கேட்க வேண்டும். இது நான் உருவாக்கிய கட்சி. கேட்காதவர்கள் கட்சியில் இருக்க முடியாது. கட்சியை விட்டு போவதாக இருந்தால் போ என ராமதாஸ் டென்ஷன் ஆனார். அதிருப்தி அடைந்த அன்புமணி, பனையூரில் தனியாக அலுவலகம் திறந்து இருக்கிறேன். என்னை வந்து சந்திப்பதாக இருந்தால் அங்கு வரலாம் என அறிவித்தார்.

டிச 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி