உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாமகவில் அப்பா -மகன் மோதல்; தனியாக செல்லும் அன்புமணி pmk| anbumani| ramadoss| pmk clash

பாமகவில் அப்பா -மகன் மோதல்; தனியாக செல்லும் அன்புமணி pmk| anbumani| ramadoss| pmk clash

புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் கட்சி தலைவரான அன்புமணி ராமதாஸ், கவுரவ தலைவர் ஜிகே மணி உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மநில இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் பரசுராமன் நியமிக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்தார். அப்பாவுக்கு பக்கத்தில் உட்கார்ந்து இருந்த அன்புமணி இதை எதிர்த்தார். முகுந்தன் கட்சியில் சேர்ந்து 4 மாதம் கூட ஆகல, அதற்குள் மாநில பதவியா? நல்ல அனுபவம் உள்ளவர்களை போடுங்கள் என்றார். ஆனால், ராமதாஸ், அன்புமணியை திரும்பிக்கூட பார்க்கவில்லை. இது நான் உருவாக்கியது கட்சி; நான் சொல்வதை கேட்காவிட்டால் யாருக்கும் இருக்க முடியாது, வெளியே போகலாம் என்றார்.

டிச 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !