பாமக கடையடைப்பு போராட்டத்தில் பரபரப்பு சம்பவம் | Dharmapuri | Strike | Shop Closed | PMK | Shop
ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தருமபுரி மாவட்டத்தில் பாமக சார்பில் இன்று அரைநாள் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. சின்னம்பள்ளி பகுதியில் வழக்கம் போல் கடைகள் இயங்கின. அங்கு வந்த வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் கடைகளை மூட வலியுறுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர். ஷட்டர் உடைக்கும் விசுவல் ப்ரத் அதேபோல் பெரும்பாலை அருகே திமுக பொதுக்குழு உறுப்பினர் சோலை மணி, தனக்கு சொந்தமான மளிகை கடையை திறந்து வைத்திருந்தார். அங்கு வந்த பாமகவினர் கடையை மூட வலியுறுத்தினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.