2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி | PMModi | Modi Visit TN | Ariyalur
ஜூலை27ல் அரியலுார், கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலில் ராஜேந்திர சோழனின் திருவாதிரை பிறந்த நாள் விழா நடக்கிறது. விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். பிரதமர் மோடியின் தமிழக பயணத் திட்டம்; ஜூலை 26ம் தேதி இரவு 7.50க்கு தூத்துக்குடி ஏர்போர்ட் வருகிறார். இரவு 8.30 முதல் 9.30 மணிக்குள் ஏர்போர்ட் புதிய முனைய திறப்பு விழாவில் பங்கேற்கிறார். இரவு 10.35க்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு திருச்சி வந்து தங்குகிறார். ஜூலை 27ம் தேதி காலை 11 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு 12 மணிக்கு கங்கை கொண்ட சோழபுரம் வரும் பிரதமர் கோயிலில் வழிபாடு செய்கிறார். மதியம் 2.25க்கு திருச்சி ஏர்போர்ட்டில் இருந்து பிரதமர் மோடி புறப்படுகிறார் என கூறப்படுகிறது. கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமரின் ரோடு ஷோ மற்றும் தஞ்சாவூரில் பாஜ நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.