உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கர்நாடகாவில் ஹெலிகாப்டர் உற்பத்தி தொடங்கி வைத்த மோடி-மேக்ரான் Modi, Macron | H-125 helicopter

கர்நாடகாவில் ஹெலிகாப்டர் உற்பத்தி தொடங்கி வைத்த மோடி-மேக்ரான் Modi, Macron | H-125 helicopter

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். மும்பையில் பிரதமர் மோடியை சந்தித்தார். இருதரப்பு உறவை வலுப்படுத்துவது மற்றும் பல்வேறு துறை சார்ந்த முக்கிய ஒப்பந்தங்கள் தொடர்பாக இருவரும் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் கர்நாடகாவின் வெமகல் பகுதியில் உள்ள ஆலையில், எச்- 125 ரக ஹெலிகாப்டர் தயாரிப்பை கூட்டாக இருவரும் தொடங்கி வைத்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்திற்கு பறக்க கூடிய உலகின் ஒரே ஹெலிகாப்டரை உள்நாட்டில் இருநாடுகளும் இணைந்து தயாரித்து உலகின் மற்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பதை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது என்றார். இந்தியாவின் டாடா குழுமம், பிரான்சின் ஏர்பஸ் நிறுவனம் இணைந்து எச் 125 ரக ஹெலிகாப்டரை உருவாக்குகின்றன. இது, ஒற்றை- இயந்திர இலகுரக ஹெலிகாப்டர். எவரெஸ்ட் சிகரம் போன்ற உலகின் மிக உயர்ந்த பனி மலைப்பகுதிகள் மற்றும் கடும் வெப்பத்திலும் பறக்கும் திறன் கொண்டது. சுற்றுலா, மீட்புப் பணி, விஐபி பயணம் மற்றும் ராணுவத் தேவைகளுக்கு இது பயன்படுத்தப்படுகிறது. இமயமலை எல்லை போன்ற கடினமான இடங்களில் ராணுவ செயல்பாடுகளுக்கு இந்த ஹெலிகாப்டர்கள் சிறப்பான பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிப் 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !