உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மோதல்களுக்கு போர்க்களத்தில் ஒருபோதும் தீர்வு காண முடியாது PmModi| shanghai cooperation organisati

மோதல்களுக்கு போர்க்களத்தில் ஒருபோதும் தீர்வு காண முடியாது PmModi| shanghai cooperation organisati

கிர்கிஸ்தானின் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்ற 26வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெற்றது. இதில் உரையாற்றிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்திற்கு எதிரான தீவிரமான போராட்டத்தில் இரட்டை நிலைப்பாட்டிற்கு இடம் அளிக்க கூடாது. பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில், செயலுக்கான எதிர்வினை என்ற அணுகுமுறையோடு மட்டும் நின்றுவிடக்கூடாது. நிதி ஆதாரம், ஆள் சேர்ப்பு, தீவிரப்படுத்துதல், புகலிடங்கள் உள்ளிட்ட பயங்கரவாதத்தின் அனைத்து சூழலமைப்பையும் தகர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மனித குலத்திற்கு பயங்கரவாதம் ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கு, பயங்கரவாதம் ஒருபோதும் யாருக்கும் ஒரு இலக்காக இருக்க முடியாது என்ற வலுவான செய்தியை நாம் அனுப்ப வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முன்னிலையிலேயே பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட நெருக்கடி, உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எரிசக்தி, கடல்சார் வர்த்தகம் மற்றும் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மோதல்களையும் போர்க்களத்தில் தீர்த்துக்கொள்ள முடியாது. பேச்சுவார்த்தை ராஜதந்திரம் மூலமாக தீர்க்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி குறிப்பிட்டார். போதைப்பொருள் கடத்தல் குற்றம் மட்டும் அல்ல; நமது இளைய தலைமுறைக்கும், பிராந்திய பாதுகாப்புக்கும் கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. இந்த சவால்களை எதிர்கொள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கீழ் நிறுவப்படும் மையங்கள், சரியான நேரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு பயனுள்ள கருவியாக மாற்ற வேண்டும். சந்தைகளை இணைக்கும், வர்த்தகத்தை எளிதாக்கும் மற்றும் வளர்ச்சிக்கான புதிய வழிகளை திறக்கும் முயற்சிகளை இந்தியா ஆதரிக்கிறது. அதேசமயம், அத்தகைய முயற்சிகள், அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். இது, சீனாவின் பட்டுப்பாதை முயற்சியை அவர் மறைமுகமாக குறிப்பிட்டதாக தெரிகிறது. #PmModi ShanghaiCooperationOrganisation #SCO #ModiSpeech #SCOSummit #ModisMessage #IndiaAtSCO #Leadership #InternationalRelations #GlobalCooperation #Unity #EconomicProsperity #StrategicAlliances #Diplomacy #Multilateralism #Peace #Development #Collaboration #SustainableGrowth

செப் 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை