/ தினமலர் டிவி
/ பொது
/ சக்தி வாய்ந்த தலைவர்களுக்கு தொடர்ந்து டஃப் கொடுக்கும் மோடி | World's Most Popular Leader | PM Modi
சக்தி வாய்ந்த தலைவர்களுக்கு தொடர்ந்து டஃப் கொடுக்கும் மோடி | World's Most Popular Leader | PM Modi
அமெரிக்காவின் பிரபல ஆய்வு நிறுவனம் மார்னிங் கன்சல்ட். உலக அளவில் புகழ்பெற்ற தலைவர்கள் குறித்த கருத்துக்கணிப்பை இந்த நிறுவனம் நடத்தி வருகிறது. சமீபத்தில் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளை மார்னிங் கன்சல்ட் வெளியிட்டுள்ளது. அதில் முதல் 10 இடம் பிடித்த மிகவும் பிரபலமான உலக தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். 69 சதவீத ஆதரவுடன் அமெரிக்கா, இங்கிலாந்து பிரதமர் என அனைவரையும் பின்னுக்கு தள்ளி விட்டு முதலிடத்தில் நீடிக்கிறார். கடந்த கருத்து கணிப்பிலும் 75 சதவீத ஆதரவுடன் மோடியே முதலிடத்தில் இருந்தார். மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவேல் 63 சதவீத ஆதரவுடன் 2வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆக 03, 2024