உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வாயை பொத்தி தூக்கி சென்று சிறுமியை சீரழித்த வாலிபர்கள்

வாயை பொத்தி தூக்கி சென்று சிறுமியை சீரழித்த வாலிபர்கள்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, கடந்த 17 ம் தேதி இரவு இயற்கை உபாதை கழிக்க வீட்டுக்கு வெளியே அருகே மறைவான இடத்துக்கு போனாள். அங்கு, மூன்று இளைஞர்கள் மது குடித்து கொண்டு இருந்தனர். சிறுமி தனியாக வருவதை பார்த்த அவர்கள், அவளது வாயை பொத்தி அப்பகுதியில் உள்ள கல்குவாரிக்கு தூக்கி சென்றனர். சிறுமியை தாக்கி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீட்டுக்கு வராததால், அவளது தந்தை தேடி வந்தார். கல்குவாரி அருகே மகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிபோய் பார்த்தார். அவரை பார்த்ததும் 3 இளைஞர்களும் இருட்டுக்குள் தப்பி ஓடி மறைந்தனர். இது பற்றி பள்ளிகொண்டா போலீசில் சிறுமியின் தந்தை புகார் அளிக்க சென்றார். ஆனால், எல்லையை காரணம் காட்டி வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளிக்க அனுப்பினர். அங்கு சென்றபோது, மீண்டும் பள்ளிகொண்டா ஸ்டேஷனுக்கு போகச்சொல்லி அலைகழித்தனர். புதிய குற்றவியல் சட்டங்கள்படி எல்லை வரம்பு இல்லாமல் எந்த போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் கொடுக்கலாம் என்ற நடைமுறை இருந்தும் போலீசார் அழைக்கழித்ததாக கூறப்படுகிறது.

நவ 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை