கள்ளச்சாராயமா என போலீசார் விசாரணை Illicit Arrack | Villupuram district | 11 Consumed | 5 discharged
விழுப்புரத்தில் சாராயம் குடித்த 11 பேருக்கு வாந்தி மயக்கம் Desc: விக்கிரவாண்டி இடைத்தேர்தலால், தொகுதி முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. வேம்பி மதுராபுரியை சேர்ந்த சக்திவேல், விழுப்புரம் எல்லையில் உள்ள புதுச்சேரிக்கு சென்று சாராயம் வாங்கி வந்தார். நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து குடித்தார். நள்ளிரவில் அனைவருக்கும் வயிற்று வலி ஏற்பட்டு வாந்தி எடுத்து மயங்கினர். அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சைக்கு பின் 5 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இருவருக்கு சிகிச்சை தொடர்கிறது. சாராயம் எங்கிருந்து வாங்கப்பட்டது. அது கள்ளச்சாராயமா? என்பது பற்றி போலீசார் விசாரிக்கின்றனர். கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் குடித்ததில் 66 பேர் இறந்த சம்பவத்தின் தாக்கம் தணியாத நிலையில், விழுப்புரம் சம்பவம் அனைவரது கவனத்தை ஈர்த்தது.