உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாக் அரசை அலறவிடும் PoK கிளர்ச்சி-பதற்றம் | PoK Protest | Ind vs Pak | JAAC Protest | Khawaja Asif

பாக் அரசை அலறவிடும் PoK கிளர்ச்சி-பதற்றம் | PoK Protest | Ind vs Pak | JAAC Protest | Khawaja Asif

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கூட்டு அவாமி அதிரடி குழு தலைமையில் வெடித்த மக்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. முசாபராபாத், ராவலகோட், மிர்பூர், கோட்லி மற்றும் பிம்பர் உள்ளிட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முக்கிய நகரங்கள் போராட்டக் களமாக மாறிவிட்டன. முழு அடைப்பு, மறியல், ஊர்வலம் என பிராந்தியமே உச்சக்கட்ட பதற்றத்தில் மூழ்கி உள்ளது. மோசமான நிர்வாகம், போதிய அரசியல் பிரதிநிதித்துவம் தராதது போன்ற காரணங்களை முன்வைத்து தான் போராட்டம் துவங்கியது. ஆனால் 30 பேரை பாகிஸ்தான் ராணுவம் கொடூரமாக சுட்டுக்கொன்றதை அடுத்து, இது அரசுக்கு எதிரான நேரடி போராட்டமாக மாறியது. இதனால் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் அவாமி அதிரடி குழுவை, தடை செய்யப்பட்ட அமைப்பாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இருப்பினும் போராட்டம் கட்டுப்படவில்லை. மாறாக தீவிரம் அடைந்து விட்டது. நேற்று ஒரே நாளில் ஒன்றரை லட்சம் பேர் வீதியில் இறங்கி ஊர்வலம் நடத்தியதால் மொத்த ஆக்கிரமிப்பு காஷ்மீரும் ஸ்தம்பித்தது. #PoKProtest #IndVsPak #JAACProtest #KhawajaAsif #Kashmir #Pakistan #India #PoliticalActivism #HumanRights #VoicesForChange #PeaceAndConflict #ProtestVideo #Activism #JusticeForAll #StandWithKashmir #GlobalAwareness #FreedomOfExpression #CommunitySolidarity #JusticeNow #RaiseYourVoice

ஜூன் 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை