தமிழக போலீஸ் மேல் இருக்க நம்பிக்கையே போச்சு | Police | Navy officer
சிவகங்கை மாவட்டம் வெட்டிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மூதாட்டி ஒய்யம்மை. வயது 65. கடந்த வருடம் ஜனவரியில் வெளியே போனவர் வீட்டுக்கு திரும்பவில்லை. உறவினர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். காணாமல் போன ஒரு சில நாட்களில் ஒய்யவந்தான் கிராமம் அருகே சுடுகாட்டில் கை துண்டான நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். காளையார்கோயில் போலீசார் மூதாட்டி காணாமல் போன வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்து ஒரு வருடமான நிலையிலும் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஜன 10, 2025