ஐபிஎஸ் அதிகாரிக்கு உதவிய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை
பாலியல் வக்கிரத்துக்கு உடந்தை இன்ஸ்பெக்டர் தூக்கியடிப்பு! சென்னை வடக்கு மண்டல டிராபிக் போலீஸ் இணை கமிஷனர் மகேஷ்குமார் ஐபிஎஸ், பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் காவலர் ஒருவர் சமீபத்தில் டிஜிபியிடம் புகார் கொடுத்தார். இது பற்றி, டிஜிபி சீமா அகர்வால் தலைமையிலான விசாகா கமிட்டி விசாரித்தது. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் மீதான பாலியல் புகாரில் அடிப்படை முகாந்திரம் இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார் விசாரணை தொடர்ந்து நடக்கிறது. பாலியல் புகாரில் சிக்கியுள்ள இணை கமிஷனர் மகேஷ்குமாருக்கு, மாதவரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மகேஷ்குமாருக்கு அவர் பல உதவிகளை செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்.