தமிழகத்தில் 2 வாரத்தில் 4வது என்கவுன்டர் | police encounter | rowdy | cuddalore | robbery issue |
விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் எம்.புதூர், அணைக்குப்பம், பெரியப்பட்டு பகுதிகளில் நேற்று ஒரே இரவில் போதை ஆசாமிகள் லாரி டிரைவர்களை சரமாரியாக வெட்டி செல்போன், பணத்தை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். முக்கிய குற்றவாளியான புதுச்சேரியை சேர்ந்த மொட்டை விஜய், கடலூர் அருகே உள்ள எம்புதூர் கிராமத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்து மொட்டை விஜய்யை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் வீச்சருவாளை எடுத்து போலீசாரை தாக்கி உள்ளார். இததில் கோபி, கணபதி ஆகிய 2 போலீசார் காயமடைந்தனர். இதனால் தற்காப்புக்காக போலீசார் மொட்டை விஜயை துப்பாக்கியால் சுட்டனர். குண்டடிபட்ட விஜயை போலீசார் கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற நிலையில் வழியிலேயே இறந்தார். மொட்டை விஜய் மீது கடலூர், புதுச்சேரியில் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மொட்டை விஜய் வழிப்பறி கூட்டத்திற்கு தலைவனாக இருந்ததும் தெரிந்தது. காயம் அடைந்த போலீசாருக்கு கடலூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.