உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சினிமா பாணியில் பெரம்பலூர் அருகே நடந்த பரபரப்பு | Perambalur | Madurai rowdy | Vellai Kali | Pudukko

சினிமா பாணியில் பெரம்பலூர் அருகே நடந்த பரபரப்பு | Perambalur | Madurai rowdy | Vellai Kali | Pudukko

மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி, காளி என்கிற வெள்ளை காளி. மதுரை கிளாமர் காளி கொலை வழக்கில் சென்ற ஆண்டு கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். வெள்ளை காளி மீது 9 கொலை வழக்குகளும், 8 கொலை முயற்சி வழக்குகளும் உள்ளது. இந்த சூழலில் இன்று மதியம் வெள்ளை காளியை புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்று கொண்டு இருந்தனர். பெரம்பலூர் திருமாந்துறை டோல்கேட் அருகே உணவருந்த போலீசார் சென்றனர். அப்போது அங்கு வந்த 15 பேர் கொண்ட கும்பல் போலீசார் மீது நாட்டு வெடிகுண்டு வீசியது. கைதி காளியை வெட்ட முயன்றனர். சுதாரித்த போலீசார் கும்பலை தடுக்க முயன்றனர். அதில் போலீஸ் வேன் டிரைவர் விக்னேஷ் குமாருக்கு வெட்டு விழுந்தது. எஸ்ஐ ராமச்சந்திரன் மற்றும் கான்ஸ்டபிள் மருதபாண்டிக்கு வெடி குண்டு வீச்சில் காயம் ஏற்பட்டது. எஸ்ஐ ராமச்சந்திரன் துப்பாக்கியால் அந்த கும்பலை நோக்கி சுட தொடங்கினார். சுதாரித்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. மங்களமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் பட்டவர்களை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை சிசிடிவி கேமரா காட்சிகள் உதவியுடன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். #Perambalur | #MaduraiRowdy | #VellaiKali | #PudukkottaiCourt | #PoliceInvestigation

ஜன 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி