உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பழனிசாமி சொல்வது vs போலீஸ் ரிப்போர்ட் | Crime | ADMK | Police Investigation | Madurai SP | EPS

பழனிசாமி சொல்வது vs போலீஸ் ரிப்போர்ட் | Crime | ADMK | Police Investigation | Madurai SP | EPS

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சாமநத்தம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார், வயது 33. அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் ஒன்றிய தலைவராக இருந்த இவர் நெடுங்குளம் சாலையில் டீக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இன்று காலை 6 மணி அளவில் கடையை திக்க இவர் சென்ற போது மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் செந்தில்குமாரை தாக்கி தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது; செந்தில் தனது டீக்கடையை திறக்க சென்ற போது, அங்கு போதையில் இருந்த ஆசாமிகளை இடையூறு செய்யாமல் செல்லுமாறு கூறி உள்ளார். இதை ஏற்காதவர்கள் அவரை கொடூரமாக தாக்கி படுகொலை செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இந்த திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயம் என்பது துளி கூட இல்லை.

பிப் 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ