தந்திரமாக செயல்பட்டு பாலியல் தொழில் கும்பலை பிடித்த போலீஸ் | Sexual workers caught | Police raid
போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை அழைத்த பாலியல் தொழில் கும்பல் மசாஜ் சென்டரில் அத்துமீறல் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக போலீசுக்கு புகார் வந்தது. வடசேரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அஜய் ராஜா, நாகர்கோவில் மைய பகுதியில் அமைந்துள்ள ஆயுர்வேதிக் ஸ்பா சென்டர் அருகே சாதாரண உடையில் சென்றார். அங்கு நின்றிருந்தபோது சப் இன்ஸ்பெக்டர் அருகில் வந்த ஒரு பெண் மசாஜ் செய்ய 2000 ரூபாய் ஆகும் என்று தெரிவித்துள்ளார். பெண்களிடம் ஜாலியாக இருக்க வேண்டும் என்றால் கூடுதலாக 2000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அந்தப் பெண் சொன்னதற்கு சம்மதிப்பதுபோல் சப் இன்ஸ்பெக்டரும் அவர் அழைத்து சென்ற ஹோட்டலுக்கு சென்று உள்ளார். அங்கு பெண்கள் அரைகுறை ஆடையுடன் இருந்ததை பார்த்த எஸ்ஐ அஜய் ராஜா, பணம் எடுத்து வருவதாக கூறி வடசேரி போலீசாரை வரவழைத்து சோதனை நடத்தினார். சப் இன்ஸ்பெக்டரை அழைத்த பெண், சென்னை போரூர் அடுத்த குன்றத்தூர் ரோட்டை சேர்ந்த 38 வயது கலைச்செல்வி என்பதும், ஸ்பா சென்டர் தொழிலாளியாக இருந்து கொண்டு விபச்சாரத்துக்கு ஆட்களை அழைத்து வரும் புரோக்கராக செயல்பட்டதும் தெரிந்ததையடுத்து அவரை கைது செய்தனர். மசாஜ் சென்டரில் பெண்களுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக ஆரல்வாய்மொழி அருகே உள்ள குமாரபுரத்தை சேர்ந்த எலக்ட்ரீஷியன் சுதன், திருநெல்வேலி என்ஜிஓ காலனி எழில்நகரை சேர்ந்த அர்பாஸ் அலிகான் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். பாலியல் தொழிலில் 2 இளம் பெண்களை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இதேபோல் மற்றொரு ஸ்பா சென்டருக்கும் சாதாரண உடையில் சென்ற மற்றோரு வடசேரி சப் இன்ஸ்பெக்ரட் சந்திரசேகர பாண்டியனையும் விபச்சாரத்துக்கு அழைத்துள்ளனர். அப்போது போலீசார் உடனடியாக சோதனை செய்ததில், அங்கு பாலியல் தொழில் செய்த சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த 28 நித்யா, சென்னை கேகே நகரை சேர்ந்த 32 வயது சித்ரா ஆகியோரை கைது செய்தனர். அவர்களால் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இளம் பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.