அதிகாலை வயலில் ஓட ஓட சரிக்கப்பட்ட ரவுடி: திடுக் பின்னணி | Ranipet | Rowdy | Rowdy Srinivasan
ராணிப்பேட்டை மாவட்டம் ரெண்டாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன், வயது 51. இவர் மீது ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்ட போலீசில் பல வழக்குகள் உள்ளது. கொலை, கொலை மிரட்டல், அதிகாரிகளை தாக்குதல், கட்டப்பஞ்சாயத்து வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இவருக்குத் திருமணம் முடிந்து இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இப்போது சொந்த கிராமத்தில் உள்ள நான்கு ஏக்கர் நிலத்தில் தனது குடும்பத்துடன் விவசாயம் செய்து வருகிறார். கோழிப்பண்ணையும் வைத்துள்ளார். மார்ச் 8 அதிகாலை தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச சென்றுள்ளார். வயல் தடத்தில் நடந்து சென்ற சீனிவாசனை கிணற்றுப் பகுதிகளில் மறைந்து இருந்த அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் வயலில் சரிந்து விழுந்த சீனிவாசன் ஸ்பாட்டிலேயே இறந்தார். இது குறித்து ஊர் பொதுமக்கள் சோளிங்கர் போலீசில் புகார் கொடுத்தனர். சீனிவாசன் உடலை மீட்ட போலீசார் வேலூர் அடுக்கம்பாறை ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்க டிஎஸ்பி தலைமையில், ஐந்து தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடந்தது. கொலையில் ஈடுபட்ட 8 இளைஞர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. இப்போது கொலை செய்யப்பட்ட சீனிவாசன் 2021 மார்ச் மாதம் பிரகாஷ் என்ற வாலிபரை தாக்கியுள்ளார்.