உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாதுகாப்பு பணிக்கு வந்தபெண் போலீஸ் திடீர் மரணம் policewoman kalaivani dies kamuthi|Devar gurupoojai

பாதுகாப்பு பணிக்கு வந்தபெண் போலீஸ் திடீர் மரணம் policewoman kalaivani dies kamuthi|Devar gurupoojai

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 63-வது குருபூஜை மற்றும் 118-வது ஜெயந்தி விழா நாளை நடைபெறுகிறது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மகளிர் போலீஸ் நிலைய தலைமை காவலர் கலைவாணி வயது 41 என்பவரும் பாதுகாப்பு பணிக்கு வந்தார். பணி முடிந்தபின் நேற்று இரவு கமுதியில் ஒரு தனியார் பள்ளியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு தொடர்ச்சியாக இருமல் வந்தது. திடீரென மயங்கி விழுந்த அவரை மற்ற போலீசார் ஆம்புலன்சில் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். கலைவாணியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கலைவாணி மரணம் பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அக் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை