உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இன்னுமா திருந்தல! திமுகவை கிழித்த அண்ணாமலை | dmk councilor arrest | illicit liquor case | annamalai

இன்னுமா திருந்தல! திமுகவை கிழித்த அண்ணாமலை | dmk councilor arrest | illicit liquor case | annamalai

ஈரோடு மாவட்டம் பெத்தாம்பாளையம் பேரூராட்சி பகுதியில் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. பெத்தாம்பாளையம் வள்ளிநகரை சேர்ந்த முத்துச்சாமி என்பவர் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அதில் 7 லிட்டர் கள்ளச்சாரயத்தை கைப்பற்றினர். அவரிடம் நடத்திய விசாரணையில் எலையாம்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் குமார் தோட்டத்தில் வைத்து கள்ளச்சாராயம் காய்ப்பது தெரிந்தது. உடனே சுரேஷ் குமாரையும் போலீசார் கைது செய்தனர். அவரது தோட்டத்தில் சோதனை நடத்திய போலீசார், அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதை உறுதி செய்தனர். கள்ளச்சாராயம் காய்ப்பதற்கு தேவையான அனைத்து வகையான செட்டிங்கும் அங்கு இருந்தது. எல்லா பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர். கைதான சுரேஷ் குமார் திமுகவில் முக்கிய புள்ளி. பெத்தாம்பாளையம் பேரூராட்சி கவுன்சிலராக உள்ளார். பெருந்துறை கிழக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் பதவியும் வகித்து வருகிறார். திமுக புள்ளி கள்ளச்சாராயம் காய்ச்சி கைதான விவகாரம் ஈரோடு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

செப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ