பழனிசாமி கூறியதை பொறுமையாக கேட்ட அமித்ஷா! Edappady Palanisamy | ADMK | Amit shah | BJP | DMK
டில்லி சென்ற எடப்பாடி பழனிசாமி செவ்வாயன்று இரவு அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளுடன், 30 நிமிடங்கள் தமிழகத்தின் பொதுவான அரசியல் நிலவரங்கள், விஜய் கட்சியின் தாக்கம், கூட்டணியை வலுப்படுத்துவது, பிரசார வியூகம் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி அமித் ஷா பேசியுள்ளார். அப்போது சில விஷயங்களை பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். துரைமுருகன், நேரு, பன்னீர்செல்வம் உள்ளிட்ட தி.மு.க. அமைச்சர்கள், பொன்முடி, செந்தில் பாலாஜி போன்ற முன்னாள் அமைச்சர்கள் மீதான அமலாக்கத்துறை சோதனைகளை விரைவுப்படுத்த வேண்டும்; நீதிமன்றங்கள் ஏற்கும் அளவுக்கு வலுவான ஆதாரங்களை திரட்ட வேண்டும்; டாஸ்மாக் ஊழல் வழக்கில் விசாரணை தடையை நீக்க தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மணல் கொள்ளை உள்ளிட்ட வழக்குகளின் விசாரணையை வேகப்படுத்த வேண்டும்.