உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / யானையிடம் சிக்கி உயிர் தப்பிய மின்வாரிய ஊழியர்கள் | Pollachi | Elephant attack

யானையிடம் சிக்கி உயிர் தப்பிய மின்வாரிய ஊழியர்கள் | Pollachi | Elephant attack

ஜீப்பை மறித்து பள்ளத்தில் உருட்டி விட்டது யானை! திக் திக் காட்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களாக ஒற்றை காட்டு யானை சுற்றி வருகிறது. ஆழியார் - வால்பாறை சாலையில் அவ்வப்போது யானை உலா வருவதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். இச்சூழலில், நவமலை பகுதியில் மின்வாரிய இளநிலை பொறியாளர் விஸ்வநாதன், அப்பர் ஆழியாருக்கு பொலிரோ ஜீப்பில் சென்று கொண்டு இருந்தார். மின்வாரிய ஊழியர்கள் 2 பேர் உடன் இருந்தனர். ஆதாளியம்மன் கோயில் அருகே வந்தபோது, எதிரே ஒற்றை ஆண் காட்டு யானை நின்றது. அதை பார்த்ததும் ஜீப்பை சற்று தூரத்திலேயே நிறுத்திவிட்டனர்.

ஜன 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி