ஆயிரக்கணக்கான வாகனங்கள் போகும் வழியில் ஆபத்து | Pollachi | Road divider
ொள்ளாச்சி கோட்டூர் ரோடு வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் போகிறது. ஆழியார், வால்பாறை நோக்கி பயணிக்கும் டூரிஸ்ட்களும் இதே வழியாக செல்கின்றனர். இந்த நிலையில் கோட்டூர் பஸ் ஸ்டான்ட் அருகே கட்டப்பட்டுள்ள மேம்பாலம் அருகில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. பாலம் குறுகலாக இருப்பது, பாலம் ஆரம்பிக்கும் இடத்தில் டிவைடர் முறையாக இல்லாதது விபத்துக்கு காரணமாகும். வால்பாறை, ஆழியார் சென்றுவிட்டு இரவில் திரும்பும் வாகனங்கள் டிவைடர் இருப்பது தெரியாமல் அதன் மீது மோதுகின்றன. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. பெரிய அளவில் விபத்து நடக்கும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
ஜூலை 23, 2025