திமுக நிர்வாகியை கவுன்சிலர் தாக்கும் பகீர் காட்சி | Pollachi | CCTV
பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் குமார். சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார். அப்பகுதியில் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளராகவும் உள்ளார். வெள்ளியன்று காலை ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ரயில்வே ஸ்டேஷன் நோக்கி சென்றுள்ளார். பத்ரகாரியம்மன் கோயில் அருகே வந்த போது 32வது வார்டு கவுன்சிலர் பெருமாள் வழி மறித்துள்ளார். ஆட்டோவை நிறுத்திவிட்டு இறங்கிய குமார், எதுக்கு இப்போ வழி மறிச்சீங்க? உள்ள பயணிகள் இருக்காங்க; அவசரமா போகணும் என்றாராம். ஆத்திரமடைந்த கவுன்சிலர் பெருமாள், என் மேலயே ஆட்டோ இடிக்கிற மாதிரி ஓட்டுவியா என கேட்டு தகராறு செய்துள்ளார். ஆட்டோவில் இருந்த இரும்பு கம்பியை உருவி ஆட்டோ ஓட்டுனர் குமாரை தாக்கி உள்ளார். இதில் கையிலும், காலிலும் பலத்த காயம் குமார் பொள்ளாச்சி அரசு ஆஸ்பிடலில் சிகிச்சை பெற்றார். பொள்ளாச்சி கிழக்கு போலீசில் திமுக கவுன்சிலர் பெருமாள் மீது புகார் கொடுத்துள்ளார்.