வன்கொடுமை சட்டத்தில் திமுக கவுன்சிலருக்கு ஜெயில் | DMK | Pollachi | Arrest
பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் குமார். சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார். அப்பகுதியில் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளராகவும் உள்ளார். கடந்த வெள்ளியன்று காலை ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ரயில்வே ஸ்டேஷன் நோக்கி சென்றுள்ளார். பத்ரகாரியம்மன் கோயில் அருகே வந்த போது 32வது வார்டு கவுன்சிலர் பெருமாள் வழி மறித்துள்ளார். அப்போது ஆட்டோவை நிறுத்திவிட்டு இறங்கிய குமாரை தாகாத வார்த்தைகளால் திட்டிய கவுன்சிலர் பெருமாள் சதி பெயரை சொல்லி அவதூறாக பேசி உள்ளார்.
மே 19, 2025