/ தினமலர் டிவி
/ பொது
/ அப்பளமானது பஸ் லெப்ட் சைடு: ஒரே ஸ்பாட்டில் 2 சோகம் | Pollachi government bus
அப்பளமானது பஸ் லெப்ட் சைடு: ஒரே ஸ்பாட்டில் 2 சோகம் | Pollachi government bus
கோவை உக்கடம் பஸ் ஸ்டாண்டில் இருந்து பொள்ளாச்சி நோக்கி அரசு பஸ் புறப்பட்டது. டிரைவராக திண்டுக்கலை சேர்ந்த காசிராஜன், கண்டக்டராக பாலசுப்ரமணியம் பணியில் இருந்தனர். 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கிளம்பிய பஸ் கோவை - பொள்ளாச்சி தேசிய ஹைவேஸில் சென்றுக்கொண்டிருந்தது. ஆட்சிபட்டி அருகே வந்த போது சாலையோரத்தில் நின்றிருந்த டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கண்டக்டர் பாலசுப்ரமணியம் ஸ்பாட்டிலேயே இறந்தார். பயணிகள் பலர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் பஸ் முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கியது.
செப் 18, 2025