அனைத்து கட்சிகளும் தேர்தலை புறக்கணிக்க எம்எல்ஏ அழைப்பு pondicherry mla resigns|
மாநில அந்தஸ்து இல்லாமல் எம்எல்ஏ பதவி மட்டும் ஏதுக்கு? புதுச்சேரி எம்எல்ஏ ராஜினாமா செய்தார் புதுச்சேரியின், உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்எல்ஏ நேரு. முதல்வர் ரங்கசாமிக்கு ஆதரவு தந்து வருகிறார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு, சமூக அமைப்புகளுடன் டெல்லி வரை சென்று போராட்டம் நடத்தினார். மாநில அந்தஸ்து கிடைக்காததால், புதுச்சேரி சட்டசபை முன், எம்எல்ஏ நேரு, தர்ணாவில் ஈடுபட்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபைக்கு அதிகாரம் இல்லையென்றால் அது எதற்கு? சட்டசபையை கலைப்பதை வலியுறுத்தி ராஜினாமா செய்வதாக கூறினார். பதவி விலகல் கடிதத்தை முதல்வர் ரங்கசாமியிடம் கொடுக்க காத்திருந்தார். ஆனால் முதல்வர் வராததால், துணை சபாநாயகர் ராஜவேலுவிடம், எம்எல்ஏ நேரு ராஜினாமா கடிதம் கொடுத்தார். புதுச்சேரி மாநில அந்தஸ்து வலியுறுத்தி, அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்து, தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.