உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமைச்சர் பொன்முடி கண் எதிரே கதறிய பெண்கள் | Ponmudi | Viluppuram

அமைச்சர் பொன்முடி கண் எதிரே கதறிய பெண்கள் | Ponmudi | Viluppuram

விழுப்புரம் பவர் ஹவுஸ் ரோட்டின் ஓரத்தில் 50க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அது ரயில்வேக்கும், நகராட்சிக்கும் சொந்தமான இடம் என்பதால் அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட் உத்தரவிட்டது. இதனால் பவர்ஹவுஸ் ரோட்டில் வசித்து வந்த 44 குடும்பங்களுக்கு திருப்பாச்சனூர் பகுதியில் இலவச மனை பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டது. பட்டா வாங்க விழுப்புரம் கலெக்டர் ஆபீஸ் வந்த மக்கள் திருப்பாச்சனூரில் பட்டா வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். விழுப்புரம் நகர பகுதியிலேயே பட்டா வழங்கவேண்டும் என கூச்சிலிட்டு வாக்குவாதம் செய்தனர். பட்டா வழங்க வந்த அமைச்சர் பொன்முடியை முற்றுகையிட்ட பெண்கள் கையெடுத்து கும்பிட்டு கதறி அழுதனர். இருக்கும் இடத்தை விட்டு எங்களால் போக முடியாது. மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என கேட்டனர். கோர்ட் உத்தரவு படி தான் ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது என கூறிய அமைச்சர் பொன்முடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பாச்சனூரில் மூன்று சென்ட் இலவசமாக வழங்கப்படும் என கூறினார். ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க இரண்டு அல்லது மூன்று மாதம் அவகாசம் வழங்கப்படும். வீடுகள் இடிக்கப்பட்ட பிறகு திருப்பாச்சனூர் இலவச பட்டா இடத்தில் வீடு கட்டித்தரப்படும் என உறுதி அளித்தார். அதன் பிறகே சமாதானம் அடைந்த பெண்கள் இலவச மனை பட்டாக்களை பெற்று சென்றனர்.

மார் 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி