உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தாரே இல்லாமல் தார் ரோடு; ₹2.17 கோடி திட்டத்தில் ஊழல் seerkazhi poor quality road | public protest

தாரே இல்லாமல் தார் ரோடு; ₹2.17 கோடி திட்டத்தில் ஊழல் seerkazhi poor quality road | public protest

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புங்கனூர் - ஆதமங்கலம் இடையே 3 கிலோ மீட்டர் நீளத்துக்கு தார் சாலை போடப்பட்டது. இதற்காக, பிரதமர் கிராம சாலைகள் திட்டத்தில் ரூ.2.17 கோடி செலவிடப்பட்டது. ஆனால், தரமில்லாமல் சாலை போடப்பட்டதால், ஒரே மாதத்தில் கற்கள் பெயர்ந்து வந்தன. புங்கனூர் பகுதியில் சேதமடைந்த சாலையை ஓட்டு போட்டு சரிப்படுத்த ஒப்பந்ததாரர் முயன்றார். ஆனால், கிராம மக்கள் தடுத்தனர். 3 கி.மீ. சாலை முழுவதுமே தரமற்ற முறையில் போடப்பட்டதாக குற்றம் சாட்டினர். கைகளாலேயே பெயர்த்து எடுக்கும் அளவுக்குதான் அதன் தரம் இருப்பதாக கூறி, சாலையின் கற்களை கைகளால் அள்ளி காண்பித்தனர்.

டிச 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை