உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புதிய போப்புக்கு மீனவ மோதிரம் அணிவிப்பு pope leo officially takes charge | catholic church

புதிய போப்புக்கு மீனவ மோதிரம் அணிவிப்பு pope leo officially takes charge | catholic church

போப் லியோ பதவியேற்பு வாடிகனின் பிரமாண்ட விழா அமெரிக்காவின் முதல் போப் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் ஏப்ரல் 21ல் மரணம் அடைந்தார். புதிய போப் ஆக அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் போப் இவர்தான். இவர் போப் லியோ 14 (Pope Leo XIV) என்ற பெயரை ஏற்றுக் கொண்டார். புதிய போப் பதவி ஏற்பு விழா இன்று வாடிகனில் நடந்தது. பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. லட்சக்கணக்கானோர் முன்னிலையில் போப் லியோ பதவி ஏற்றுக்கொண்டார். போப்பின் அதிகாரத்தைக் குறிக்கும் வகையில் மீனவ மோதிரம் அணிவிக்கப்பட்டது. பதவியேற்பின் போது போரால் பாதிக்கப்பட்ட காசா, உக்ரைன் மக்களுக்காக போப் 14ஆம் லியோ சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்தியா சார்பில், ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயணன் சிங் பங்கேற்றார்.

மே 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !