உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போப் பிரான்சிஸ் உடலுக்கு உலக தலைவர்கள் அஞ்சலி! Pope Francis buried|pope funeral|

போப் பிரான்சிஸ் உடலுக்கு உலக தலைவர்கள் அஞ்சலி! Pope Francis buried|pope funeral|

கத்ததோலிக்க திருச்சபையின் 266வது போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் கடந்த 21ம் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் வாடிகன் புனித பீட்டர் தேவாலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. உலகம் முழுவதில் இருந்தும் லட்சணக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்த குவிந்தனர். 3 நாட்களில் இரண்டரை லட்சம் பேர், போப் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும் 2 லட்சம் பேர் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டனர். 50 நாடுகளின் தலைவர்கள், 150 நாடுகளின் பிரதிநிதிகளும் போப்புக்கு அஞ்சலிசெலுத்தினர். இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அஞ்சலி செலுத்தினார். அவருடன், மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜூஜூ, ஜார்ஜ் குரியன் உள்ளிட்டோர் இருந்தனர். தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் நாசர், எம்எல்ஏ இருதயராஜ் ஆகியோர் அஞ்சலிசெலுத்தினர். அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரேசில் அதிபர் லூலா டா சில்வா, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் கெயிர் ஸ்டார்மர், இளவரசர் வில்லியம் உள்ளிட்ட தலைவர்கள் போப் பிரான்சிஸ்க்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

ஏப் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை