பிரபல காமெடி நடிகர் கைது: போலீஸ் அதிரடி: திரையுலகம் அதிர்ச்சி Posani Krishna Murali arrested Andhra
நடிகர், டைரக்டர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர் போசானி கிருஷ்ண முரளி. ஐதராபாத்தில் வசித்து வருகிறார். அரசியல்வாதிகளை கிண்டலடிக்கும் விதமாக பல படங்களில் கலக்கல் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவர், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளரும் கூட. ஆந்திர சட்டசபை தேர்தல் சமயத்தில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்த பிறகு ஆந்திராவில் பல போலீஸ் நிலையங்களில் போசானி கிருஷ்ணமுரளி மீது தெலுங்குதேசம் கட்சியினர் புகார் கொடுத்தனர். அதனடிப்படையில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அன்னமய்யா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில் அவரை கைது செய்வதற்காக போலீசார் நேற்றிரவு ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். கைது வாரண்டை கொடுத்தனர். உடல்நலம் சரியில்லை சிகிச்சையில் இருக்கிறேன்; வர முடியாது என போசானி கூறினார்.