/ தினமலர் டிவி
/ பொது
/ கழிவு மீன் நிறுவனங்களை மூடுங்க: தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு Thoothukudi | Pottalurani
கழிவு மீன் நிறுவனங்களை மூடுங்க: தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு Thoothukudi | Pottalurani
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொட்டலூரணி கிராமத்தில் ஜெனிபா இண்டியா, மார்க்ஸ்மென், என்.பி.எம். ஆகிய 3 தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இந்த நிறுவனங்களில் கழிவு மீன்களை மூலப்பொருளாக கொண்டு மீன் எண்ணெய், கால்நடை தீவனம், விவசாய நிலங்களுக்கு தேவையான உரம், அழகு சாதனப்பொருட்கள் உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படுகிறது. அந்தநிறுவனங்களில் இருந்து வெளியேறும் கடுமையான துர்நாற்றத்தால் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள், பெரியவர்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்படுகிறது.
மார் 23, 2026