/ தினமலர் டிவி
/ பொது
/ விசைத்தறி தொழிலை காக்க அரசுக்கு கோரிக்கை! Powerloom Industry | Covai | Tiruppur
விசைத்தறி தொழிலை காக்க அரசுக்கு கோரிக்கை! Powerloom Industry | Covai | Tiruppur
கோவை அருகே சூலூர், கருமத்தம்பட்டி, சோமனூர் பகுதிகளில் விசைத்தறிகள் அதிகளவில் செயல்பட்டு வந்தன. தற்போது நூல் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விசைத்தறி தொழில் நசிந்து வருகிறது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மொத்தம் 2 லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் இயங்கி வந்தன. தற்போது அவை 1 லட்சமாக குறைந்து விட்டன. இது ஒருபுறம் இருக்க விசைத்தறி தொழிலாளர்கள் ஷிப்ட் கணக்கில் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டி இருக்கும். கூலியும் குறைவாக இருப்பதால் அவர்கள் திருப்பூர் பனியன் கம்பெனிக்கும், கட்டட வேலைக்கும் சென்று விடுகின்றனர்.
மார் 05, 2025