உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காங்கிரஸ் மீது பிரணாப்பின் மகள் சரமாரி குற்றச்சாட்டு pranab Mukherjee| Congress| Sharmistha Mukherje

காங்கிரஸ் மீது பிரணாப்பின் மகள் சரமாரி குற்றச்சாட்டு pranab Mukherjee| Congress| Sharmistha Mukherje

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஸ்தா முகர்ஜி தமது தந்தை இறந்த போது காங்கிரஸ் கட்சி நடந்து கொண்ட விதம் பற்றி புகார் கிளப்பி உள்ளார். என் தந்தை இறந்தபோது, இரங்கல் தெரிவிப்பதற்கு காங்கிரஸ் செயற்குழு கூடவில்லை. அதைப்பற்றி காங்கிரஸ் தலைவர்கள் கவலைப்படவும் இல்லை. இது பற்றி மூத்த தலைவர் ஒருவர் என்னிடம் கூறும்போது, ஜனாதிபதியாக இருந்தவர்களுக்கு செயற்குழுவில் இரங்கல் தெரிவிப்பது வழக்கம் இல்லை என்றார். ஆனால், அதெல்லாம் சுத்த உளறல். என் தந்தை பிரணாப்பின் டைரியில் முந்தைய நிகழ்வுகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் இறந்தபோது, காங்கிரஸ் குழு கூடி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது பற்றிய குறிப்புகள் உள்ளன. அந்த இரங்கல் தீர்மானத்தை என் தந்தைதான் தயார் செய்துள்ளார் என்பது பின்னாளில்தான் எனக்கு தெரியவந்தது என சர்மிஸ்தா முகர்ஜி தெரிவித்து உள்ளார்.

டிச 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை