உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பீகாரிகளிடம் மன்னிப்பு கேளுங்க; தனித்து நிற்க திராணி இருக்கா?

பீகாரிகளிடம் மன்னிப்பு கேளுங்க; தனித்து நிற்க திராணி இருக்கா?

பீகார் சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் என்டிஏ மற்றும் இண்டி கூட்டணிகளுடன் புதிதாக, பிரசாந்த் கிஷோரின் ஜன ஸ்வராஜ் கட்சியும் களம் இறங்குகிறது. இச்சூழலில், பீகாரிகளை தவறாக பேசி வரும் காங்கிரஸ் தலைவர்கள் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பிரசாந்த் கிஷோர் கூறினார். பீகாரிகள் கூலி வேலை செய்யவே பிறந்தவர்கள். அவர்களின் டிஎன்ஏவில் அது ஊறியுள்ளது என, காங்கிரசை சேர்ந்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசுகிறார். இதை, ராகுல் வேடிக்கை பார்க்கிறார். தெலங்கானா முன்னாள் பிரதமர் சந்திரசேகர ராவ் பீகாரை சேர்ந்த ஐஏஎஸ்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கினார். அதனால் தான், ரேவந்த்துக்கு பீகாரிகளை பிடிக்கவில்லை. டில்லியில் இருக்கும் போது, பீகாரிகளை தரக்குறைவாக பேசும் ராகுல், ஓட்டுக்காக மட்டும் இங்கு ஓடி வருகிறார். பீகாரில் 35 ஆண்டுகளாக காங்கிரஸ் காணாமல் போயிருக்கிறது. அவர்களுக்கு செல்வாக்கு இருப்பதாக நினைத்தால் தேர்தலில் தனித்து போட்டியிட திராணி இருக்கிறதா? என பிரசாந்த் கிஷோர் கேட்டுள்ளார்

ஜூன் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி