சம்பளம் பற்றி வெளிப்படையாக பேசிய பிரசாந்த் கிஷோர் | Prashant Kishor | IPAC
பீஹாரை சேர்ந்தவர் பிரசாந்த் கிஷோர். அரசியல் ஆலோசகரான இவர் பல கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளார். பாஜ, காங்கிரஸ், திரிணமுல், தி.மு.க கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்தவர். இப்போது ஜன் சுராஜ் என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். பீகார் மாநிலத்தின் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர், தராரி ஆகிய நான்கு தொகுதிகளில் வரும் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. ஜன் சூரஜ் கட்சி சார்பில் பிரசாந்த் கிஷோர் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். பெலகஞ்சில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் பேசினார்.
நவ 02, 2024